/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெடுஞ்சாலைகளை ஆக்கிரமிக்கும் மாடுகள்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
/
நெடுஞ்சாலைகளை ஆக்கிரமிக்கும் மாடுகள்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
நெடுஞ்சாலைகளை ஆக்கிரமிக்கும் மாடுகள்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
நெடுஞ்சாலைகளை ஆக்கிரமிக்கும் மாடுகள்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
ADDED : நவ 25, 2025 04:51 AM

வி ழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைகளான சென்னை, திருச்சி, புதுச்சேரி மார்க்கங்களில் தினந் தோறும் எண்ணற்ற வாகனங்கள் செல்கின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையில், மாடுகள் கும்பலாக அமர்ந்து ஓய்வெடுக்கின்றன. சில தருணங்களில் வாகனங்களில்ஹாரன் சத்தம் கேட்டு ஓடும்போது இரு சக்கர வாகனஓட்டிகள் மீது மோதுவதால்விபத்துக்கள் ஏற்படுகிறது.
தொடர்ந்து, நெடுஞ்சாலைகளில் மாடுகள் ஆக்கிரமித்து கொண்டிருப்பதால்,இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் அச்சத்தோடு சாலையை கடக்கின்றனர்.
மெத்தனமாக உள்ள விழுப்புரம் நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைகளில் உள்ள படுத்து ஓய்வு எடுக்கும் மாடுகளை அப்புறப்படுத்துவதோடு, மாடு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.