/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
/
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
ADDED : நவ 15, 2024 05:04 AM

செஞ்சி: செஞ்சியில் கமலக்கன்னியம்மன் கிரிக்கெட் கிளப் சார்பில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
ஒரு மாதம் நடந்த போட்டியில் செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாவைச் சேர்ந்த 30 அணிகள் பங்கேற்றன. இதில், முதல் இடத்தை எஸ்.கே.,11 அணியும், இரண்டாமிடத்தை பீரங்கிமேடு கிரிக்கெட் கிளப் குழுவும், மூன்றாமிடத்தை என்.ஆர். பேட்டை குழுவும், நான்காமிடத்தை தேவனுார் அணியும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. முதலிடம் பிடித்த அணிக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் பிரித்விராஜ் பரிசு தொகை வழங்கினார்.
இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, மூன்று, நான்காம் பரிசை என்.ஆர்., பேட்டை முன்னாள் தலைவர்கள் பாலகிருஷ்ணன், ஏழுமலை, முன்னாள் துணை தலைவர் ராமு ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் விழா குழுவினர் பங்கேற்றனர்.