/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
/
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
ADDED : ஜன 19, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி,- தையூர் கிராமத்தில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடந்தது.
வல்லம் அடுத்த தையூர் கிராமத்தில் இளைஞர்கள் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியில், பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 16 அணி யினர் பங்கேற்றனர்.
இதில், ரெட்டணை அணி, மொடையூர் அணி, ஆசூர் அணிகள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய், 5,000 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
பரிசை திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் ஆனந்தராஜ், மகேஷ் குமார், மணிமாறன் ஆகியோர் வழங்கினர். கிராம மக்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.