/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
/
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
ADDED : ஜூன் 05, 2025 06:59 AM

விக்கிரவாண்டி;விக்கிரவாண்டியில் கோடை கால கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விக்கிரவாண்டி கிரிக்கெட் கிளப் 2.0 சார்பில் கோடை கால கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன. போட்டியில் அடைக்கலாபுரம் அணி முதல் பரிசையும், விக்கிரவாண்டி அணி 2ம் பரிசையும், நெடிமோழியனுார் அணி 3ம் பரிசையும் வென்றன.
நேற்று நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கிரிக்கெட் கிளப் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு முதல் பரிசையும், , பேரூராட்சி கவுன்சிலர் புஷ்பராஜ் இரண்டாம் பரிசையும், இளைஞரணி துணை அமைப்பாளர் சிவா மூன்றாம் பரிசையும் வழங்கி பாராட்டி பேசினர்.
கிரிக்கெட் கிளப் நிர்வாகி நவீன் மணி நன்றி கூறினார்.