UPDATED : ஆக 27, 2026 10:22 PM
ADDED : ஆக 27, 2026 07:43 PM
வளவனுார் அடுத்த பனங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் என்கிற மாதேஸ்வரன், 26; ஓட்டல் கடையை நிர்வகித்து வருகிறார். ஓட்டல் உரிமையாளர் சல்மா கத்தார் நாட்டில் உள்ளார். ஓட்டலில் இருந்து பாத்திரங்களை மாதேஷ் பயன்படுத்துவதாக வெளிநாட்டில் உள்ள சல்மானுக்கு தகவல் தெரிவித்ததாக ராமையன்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 68; தெரிவித்ததாக நினைத்து அவரை தாக்கினார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து மாதேைஷ கைது செய்தனர்.
மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை
வளவனுார் பக்கமேட்டு பாதையைச் சேர்ந்தவர் பழனிவேல் மகன் நித்யாநந்தம், 29; இவரது மனைவி அகிலா தனது முதல் பிரசவத்திற்காக தாய் வீடான மும்பைக்கு சென்று 4 மாதங்கள் ஆகிறது. மனைவியை ஊருக்கு அழைத்து வராததால் மன உளைச்சலில் இருந்த நித்யாநந்தம் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கணவர் மாயம்: மனைவி புகார்
வானுார் அடுத்த நெமிலியைச் சேர்ந்தவர் துரைராஜ். சிற்ப வேலை செய்து வருகிறார். கடந்த 13ம் தேதி, வெளியூருக்கு வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மனைவி வள்ளி அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பொபைல்போன் பறிப்பு: 4 பேருக்கு வலை
கிளியனுார் அடுத்த கொந்தமூரைச் சேர்ந்தவர் பாக்கியராஜ், 31; டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு பொலிரோ பிக்கப் வேனில் புதுச்சேரி நோக்கிச் சென்றார். துருவை சந்திப்பில் இயற்கை உபாதைக்காக வேனை சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். அப்போது அந்த வழியாக 2 பைக்கில் வந்த 4 பேர், பாக்கியராஜை கீழே தள்ளி மொபைல் போனை பறித்துச் சென்றனர். புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்கள் 4 பேரை தேடி வருகின்றனர்.
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
திண்டிவனம், ரோஷணை போலீசார் சலவாதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த செல்வம், 56; என்பவரை கைது செய்து, 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் முருங்கப்பாக்கம் பகுதியில் மது பாடடில் விற்ற ஏழுமலை, 36; என்பவரை கைது செய்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கணவர் மாயம்: மனைவி புகார்
வானுார் அடுத்த வி.பரங்கனியைச் சேர்ந்தவர் துரை, 50; பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர், வானுார் அடுத்த நைனார்பாளையத்தில் உள்ள மகள் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 20ம் தேதி புதுச்சேரியில் உள்ள வீட்டிற்கு செல்வதாகக்கூறிச் சென்றவர் வீட்டிற்கு செல்லவில்லை. அவரது மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
