ADDED : செப் 29, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
செஞ்சி: வீட்டில் துாங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் நகைகளை பறித்துச் சென்றனர்.
செஞ்சி அடுத்த பரதன் தாங்கல், தொப்பையப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் காசியம்மாள், 85; இவர் நேற்று முன்தினம் பகல் 12:30 மணியளவில் வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு துாங்கி கொண்டிருந்தார்.
அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் காசியம்மாளின் வாயை பொத்தி, அவர் அணிந்திருந்த 6 கிராம் கம்மல், 3 கிராம் மூக்குத்தியை கழற்றிக்கொண்டு தப்பினர். சத்தியமங்கலம் போலீசார் வழக்குபதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
