விவசாயி தற்கொலை
கல்வராயன்மலை, தாழ்சாத்தனுாரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 44; விவசாயி. இவர் பக்கதவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மனமுடைந்த ஏழுமலை, கடந்த மாதம் 30ம் தேதி களைக்கொல்லி மருந்தை குடித்தார். உடன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார். கரியாலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வன ஊழியர்கள் தாக்கு: 6 பேர் மீது வழக்கு
மணியார்பாளையம், நக்கவளவு கிராமத்தில் கடந்த மாதம் 26ம் தேதி வனப்பகுதியில் சிலர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சாலை போடும்பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சென்ற மணியார்பளையம் பிரவு வனவர் பெருமாள் தலமையிலான வனத்துறை ஊழியர்கள் சாலை பணியை தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த நக்கவளவு கிராமத்தை சேர்ந்த சக்திவேல், கதிர்வேல், வாழப்பூண்டி ஆண்டி, தேவனுார் செல்வராஜ், தாழ்மதுார் அண்ணாமலை, வெங்கடேசன் ஆகியோர் வனத்துறை ஊழியர்களை தாக்கினர். புகாரின் பேரில் 6 பேர் மீதும் கரியாலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மது பாட்டில் விற்றவர் கைது
தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் மலர்விழி நேற்று சூளாங்குறிச்சி பகுதியில் ரோந்து சென்றார். அய்யனார் கோவில் அருகே மது பாட்டில் விற்ற க.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்த அன்பு ராஜா, 42; என்பவரை கைது செய்து, 7 மதுபாட்டில் மற்றும் 2,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
மயங்கி விழுந்தவர் சாவு
புதுச்சேரி, நைனார்மண்டபத்தைச் சேரந்தவர் தேவராசு, 74; ஓய்வு பெற்ற தாசில்தார். கண்டமங்கலம் அடுத்த பண்ணக்குப்பத்தில் விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் நிலத்தில் மண்வெட்டியால், வரப்பை வெட்டி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டவர், மயங்கி விழுந்து இறந்தார். கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மகனுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மண்டகமேடு பிரகாஷ், 24; இவரது மனைவி பிரபாவதி, 20; மற்றும் மகன் ருத்ரன் 2; இருவரும் கடந்த 24ம் தேதி மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.