sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிரைம் செய்திகள்...

/

கிரைம் செய்திகள்...

கிரைம் செய்திகள்...

கிரைம் செய்திகள்...


ADDED : ஆக 19, 2025 12:18 AM

Google News

ADDED : ஆக 19, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மது பாட்டில் விற்ற பெண் கைது

திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் நேற்று சரவணம்பாக்கம் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த சந்திரா, 56; என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மணல் கடத்திய 2 பேர் கைது

திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் டி. புதுப்பாளையம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஆற்றில் மணல் கடத்திய சங்கர்,50; அண்டராயநல்லுார்தவமணி, 49; ஆகிய இருவரையும் கைது செய்து, மணல் கடத்தி வைத்திருந்த இரு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

கணவர் மாயம்: மனைவி புகார்

கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார்சாவடியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 44; கூலித் தொழிலாளி. இவர், கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி தனது மனைவி ராஜகுமாரியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் தர மறுத்ததால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

இது குறித்து ராஜகுமாரி நேற்று அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வரு கின்றனர்.

பைக்கிலிருந்து விழுந்தவர் பலி

மரக்காணம் அடுத்த அனுமந்தை பகுயைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 44; கார்பெண்டர். இவர், நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு பைக்கில் இ.சி.ஆரில் வீடு திரும்பினாா்.

கீழ்புத்துப்பட்டு அருகே, நிலை தடுமாறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர், காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஆட்டோ மீது பஸ் மோதி 4 பேர் காயம்

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூரைச் சேர்ந்த வர் கவிதாசன், 35; ஆட்டோ டிரைவர். இவர், நேற்று அதிகாலை 2:00 மணியளவில் ஆலங்குப்பத்தைச் சேர்ந்த விஜயகாந்த், 32; ஸ்ரீகாந்த்,14; குமரேசன், 32; ஆகிய மூன்று பேருடன் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக விழுப்புரம் சென்றார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த டிரைவர் உட்பட நான்கு பேரும் படுகாயமடைந்தனர். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஊழியர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அடுத்த கருமாக்குடியைச் சேர்ந்தவர் ராதாரவி, 36; திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். திண்டிவனம் அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரிந்து வந்தார். குடும்பத்துடன் திண்டிவனம், ஜெயபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 16ம் தேதி, இவரது மனைவி தாம்பரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று காலை கணவருடைய மொபைல் போனை தொடர்பு கொள்ள முடியாததால் வீட்டின் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்து பார்க்கும்படி கூறியுள்ளார்.

நேற்று காலை 11:00 மணியளவில் பூட்டியிருந்த வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, ராதாரவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கஞ்சா விற்ற வாலிபர் கைது

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார், நேற்று தந்தை பெரி யார் நகரில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பானாம்பட்டு சாலை, அரவிந்தர் நகரைச் சேர்ந்த தமிழ்செல்வன் மகன் மகேஷ் பூபதி,18; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும் தப்பியோடிய முத்தோப்பைச் சேர்ந்த அஷ்ரப் அகமது என்பவரை தேடி வருகின்றனர்.

மயங்கி கிடந்த மூதாட்டி சாவு

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், சேலம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் 80 வயது அடையாளம் தெரியாத பிச்சை எடுக்கும் பெண் ஒருவர் மயங்கி கிடந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீ சார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

வாலிபரை மிரட்டியவர் மீது வழக்கு

வளவனுார் அருகே சொர்ணாவூர் மேல்பாதி கிரா மத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் காந்தி, 26; இவர் நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு சொர்ணாவூரில் உள்ள ஏரிக்கரை அருகே சென்ற போது, சொர்ணாவூர் கீழ்பாதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் மது அருந்தியுள்ளார். இங்கு ஏன் மது அருந்துகிறீர்கள் என காந்தி கேட்டதால் ஆத்திரமடைந்து காந்தியை தாக்கி மிரட்டியுள்ளார். வளவனுார் போலீசார் ராஜசேகர் மீ து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us