/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொங்கல் முடிந்து ஊர் திரும்பும் மக்கள்: பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசல்

UPDATED : ஜன 19, 2026 03:59 PM
ADDED : ஜன 19, 2026 05:26 AM

விழுப்புரம்: விழுப்புரம் பஸ் நிலையத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து, வெளி மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்காக சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்தனர்.
பொங்கல் விடுமுறை முடிந்து விழுப்புரம் மாவட்ட மக்கள், நேற்று சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு புறப்பட்டனர்.
இதனால், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் சென்னை, சேலம், திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பஸ் நிலையத்தில் மக்கள் குவிந்தனர்.