/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிரஷர், லாரி உரிமையாளர்கள் ஆலோசனைக்கூட்டம்
/
கிரஷர், லாரி உரிமையாளர்கள் ஆலோசனைக்கூட்டம்
ADDED : ஜூலை 05, 2025 06:46 AM
விழுப்புரம் : விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட கிரஷர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, புவியியல் மற்றும் சுரங்கத்துறை மண்டல இணை இயக்குநர் ஆறுமுக நயினார் தலைமை தாங்கினார்.
இதில் விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலுார், சென்னை, திருவள்ளுர், கள்ளக்குறிச்சி ஆகிய 13 மாவட்டங்களில் இயங்கும் அனைத்து வகை கனிம குவாரிகள், கிரஷர்கள், சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றிலிருந்து கனிமங்கள் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி கட்டாயமாக பொருத்த வேண்டும்.
அனைத்து குவாரிகளிலும் எடை மேடை அமைக்க வேண்டும். ஜி.பி.எஸ்., கருவியை வரும் 31ம் தேதிக்குள் கட்டாயம் பொருத்த வேண்டும். கருவி பொறுத்தப்பட்டதற்கான சான்றிதழை சம்மந்தப்பட்ட துணை, உதவி இயக்குநர் அலுவலகங்களில் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வரும் ஆக., 1ம் தேதி முதல் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்படாத வாகனங்களுக்கு கனிமம் ஏற்றி செல்வதற்கு, 'பர்மிட்' வழங்கப்படாது. புதியதாக குவாரி குத்தகை உரிமம் பெற விரும்புவர்கள் இணையதளம் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அரசு அனுமதிச்சீட்டு ஏதும் இல்லாமல் கனிமங்கள் கொண்டு சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
அப்போது, அரசு அலுவலர்கள் மற்றும் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.