/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேலை வாங்கி தருவதாக ரூ.4.50 லட்சம் மோசடி; கடலுார் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது

ADDED : நவ 16, 2024 05:27 AM

விழுப்புரம் : அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.4.50 லட்சம் மோசடி செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லுார் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சம்பத்,50; இவரது மகன் ஞானவேல், இன்ஜினியரிங் படித்துள்ளதால், அவருக்கு அரசு வேலை பெற முயற்சி செய்து வந்துள்ளார்.
அப்போது விழுப்புரம், வழுதரெட்டி காந்தி நகரைச் சேர்ந்த, கடலுார் மாவட்ட ஆயுதப் படையில் முதல்நிலைக் காவலராக பணியாற்றி வரும், பாண்டியன், 45; என்பருடன் பழக்கம் ஏற்பட்டதால், அவரிடம் வேலை வாங்கித் தருமாறு கேட்டார்.
அதற்கு அவர், தனக்கு அரசியல்வாதி மற்றும் அரசு அதிகாரிகள் பழக்கம் உள்ளதாகவும், அதனால் உங்கள் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார்.
அதனை நம்பிய சம்பத், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி ரூ.2.50 லட்சத்தை பாண்டியன் வங்கி கணக்கில் செலுத்தினார். அதன்பிறகு மேலும் ரூ.2 லட்சத்தை நேரில் கொடுத்துள்ளார்.
ஆனால், பாண்டியன் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து சம்பத், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி பிரிவில் வழக்கு பதிந்து, போலீஸ்காரர் பாண்டியனை நேற்று இரவு கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.