/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எஸ்.எம்.எஸ்., வருகை பதிவுக்குஆசிரியர் கூட்டமைப்பு ஆதரவு
/
எஸ்.எம்.எஸ்., வருகை பதிவுக்குஆசிரியர் கூட்டமைப்பு ஆதரவு
எஸ்.எம்.எஸ்., வருகை பதிவுக்குஆசிரியர் கூட்டமைப்பு ஆதரவு
எஸ்.எம்.எஸ்., வருகை பதிவுக்குஆசிரியர் கூட்டமைப்பு ஆதரவு
ADDED : செப் 07, 2011 10:52 PM
திட்டக்குடி:ஆசிரியர்களின் எஸ்.எம்.எஸ்., வருகை திட்டத்திற்கு மங்களூர் வட்டார அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
மங்களூர் வட்டார ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் வட்டாரத் தலைவர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலூர் மாவட்டத்தை சிறந்த மாவட்டமாக மாற்றும் பணி மேற்கொண்டுள்ள கலெக்டர்
அமுதவல்லி ஆசிரியர்களின் வருகையை எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க
உத்தரவிட்டார்.
இதன் மூலம் ஆசிரியர்கள் மாவட்டத்தின் அனைத்து துறைகளுக்கு
முன்னுதாரணமாகவும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும்
திகழ்கிறார்கள்.
இதனைப் புரிந்து கொள்ளாமல் எஸ்.எம்.எஸ்., வருகை பதிவு திட்டத்தை எதிர்த்து
வரும் சில ஆசிரியர் சங்கங்கள் ஆசிரியர் தினத்தன்று கறுப்பு பேட்ஜ் அணிந்து
போராட்டம் நடத்த அறிவித்திருந்தனர். மங்களூர் வட்டார அனைத்து ஆசிரியர்
கூட்டமைப்பு எஸ்.எம்.எஸ்., வருகைப் பதிவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றது.
இதுவரை 50க்கும் மேற்பட்ட பள்ளி தலைமைஆசிரியர்கள் எஸ்.எம்.எஸ்., வருகை
பதிவு திட்டத்தினை பின்பற்றி வருகின்றனர். இது மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.