ADDED : செப் 07, 2011 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி:பண்ருட்டி பஸ் நிலையத்தில் மகள் மாயமானது குறித்து அவரது தாயார்
போலீசில் புகார் செய்துள்ளார்.திருக்கோவிலூர் மாரியூங்கர் காலனியைச்
சேர்ந்தவர் வீராசாமி மனைவி புஷ்பா, 40. இவர்களது மகள் ஜெயஸ்ரீ, 15. இவர்
பரங்கிபேட்டை சேவாமந்திர் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 27ம் தேதி ஜெயஸ்ரீயை பள்ளியில் விட்டு வருவதற்காக புஷ்பா பண்ருட்டி
பஸ் நிலையம் வந்தார்.அப்போது திடீரென ஜெயஸ்ரீயை காணவில்லை. பல இடங்களில்
தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து புஷ்பா கொடுத்த புகாரின் பேரில்
பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.