/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோடையில் காய்கறி பயிர் சாகுபடி; தோட்டக்கலை துறை அழைப்பு
/
கோடையில் காய்கறி பயிர் சாகுபடி; தோட்டக்கலை துறை அழைப்பு
கோடையில் காய்கறி பயிர் சாகுபடி; தோட்டக்கலை துறை அழைப்பு
கோடையில் காய்கறி பயிர் சாகுபடி; தோட்டக்கலை துறை அழைப்பு
ADDED : மார் 16, 2025 11:12 PM
விக்கிரவாண்டி; கோடை காலங்களில் காய்கறி பயிர்களை சாகுபடி செய்து நிறைவான லாபம் பெற விவசாயிகளுக்கு விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலை துறை இயக்குனர் ஜெய்சன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
கோடையில் எப்போதும் காய்கறிகளின் விலை ஏற்றம் அதிகமாகவே இருக்கும். இது போன்ற விலையேற்றங்களை சரி செய்திட வேளாண்மை உற்பத்தியாளர்களின் அறிவுரைப்படி தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளை காய்கறி சாகுபடி செய்திட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் கடந்த கோடை காலத்தில் தக்காளி, வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் விலையேற்றத்தால் அதிக லாபம் பெற்றனர். விக்கிரவாண்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தங்களது நிலங்களில் குறைந்தபட்ச பரப்பிலாவது தக்காளி ,வெங்காயம் கத்தரி, வெண்டை ஆகிய பயிர்களை கோடை காலங்களில் சாகுபடி செய்ய வேண்டும்.
இதற்குரிய தொழில்நுட்பங்களும், விதைகளும், நாற்றுகளும் மானிய விலையில் வழங்கிட தோட்டக்கலைத் துறை தயாராக உள்ளது. எனவே விவசாயிகள் கோடைகால பருவ நிலையில் காய்கறி பயிர்களை சாகுபடி செய்திட விக்கிரவாண்டி தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி பயன் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

