/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிலதிபரிடம் ரூ.26 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
/
தொழிலதிபரிடம் ரூ.26 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
தொழிலதிபரிடம் ரூ.26 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
தொழிலதிபரிடம் ரூ.26 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
ADDED : பிப் 17, 2024 06:29 AM
விழுப்புரம் : விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம், ஆன்லைனில் 26 லட்சம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் ரங்கசாமி லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா ஆனந்த்பிரபு, 49; தொழிலதிபர். இவர், கடந்த டிசம்பர் 25ம் தேதி தனது முகநுாலை பயன்படுத்திய போது, வந்த லிங்க்கில் வந்த வாட்ஸ் ஆப் எண் மூலம் மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு, அதன் பெயரில் வங்கி கணக்கு தொடங்கினால் அதனை பிளாக் டிரேடிங்கில் முதலீடு செய்து, அதிக லாபம் பெற்றுத் தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய ராஜா ஆனந்த்பிரபு, 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை 10 தவணைகளாக அனுப்பி முதலீடு செய்துள்ளார். ஆனால், அவருக்கு சேர வேண்டிய லாப தொகையை தராமல், மர்ம நபர்கள் மொபைல் போன் அழைப்பை துண்டித்துள்ளனர்.
இதுகுறித்து ராஜா ஆனந்த்பிரபு கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.