/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோலியனுார் கூட்ரோட்டில் இன்று சைக்கிள் போட்டி
/
கோலியனுார் கூட்ரோட்டில் இன்று சைக்கிள் போட்டி
ADDED : செப் 28, 2025 03:40 AM
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுார் கூட்ரோட்டில் இன்று மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடக்கிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, இன்று மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடக்கிறது. விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நாளை காலை 7:00 மணிக்கு கோலியனுார் கூட்ரோடு என்ற இடத்தில் துவங்கப்படும்.
மூன்று பிரிவுகளாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போட்டி நடக்கிறது. முதல் பரிசு ரூ.5000; இரண்டாம் பரிசு ரூ.3000; மூன்றாம் பரிசு ரூ.2000; மற்றும் 4 முதல் 10 இடங்கள் வரை வெற்றி பெறுவோருக்கு ரூ.250 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
வயது சான்றை பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று வர வேண்டும். ஆதார் அட்டை நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
சாதாரண சைக்கிளை கொண்டு வர வேண்டும். போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னரே வந்து உரிய சான்றுகளை வழங்கி, பதிவு எண் பெற்று தயார் படுத்திக்கொள்ள வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது 7401703485, 9597903077, 8270707537 என்ற மொபைல் எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.