/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெஞ்சல் புயல் நிவாரணம்; கலெக்டரிடம் விவசாயிகள் மனு
/
பெஞ்சல் புயல் நிவாரணம்; கலெக்டரிடம் விவசாயிகள் மனு
பெஞ்சல் புயல் நிவாரணம்; கலெக்டரிடம் விவசாயிகள் மனு
பெஞ்சல் புயல் நிவாரணம்; கலெக்டரிடம் விவசாயிகள் மனு
ADDED : ஏப் 15, 2025 08:56 PM
விழுப்புரம்; விழுப்புரத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு பெஞ்சல் புயல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு விபரம்:
விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, முதல்வர் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு, பல கிராம விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆனாங்கூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, பயிர் சேதம் கணக்கிட்டு தேர்வாகியும், நிவாரணம் வழங்காமல் விடுபட்டுள்ளது.
வேளாண்துறை அதிகாரிகளிடம் நேரில் முறையிட்டு, மனுவாக அளித்தும், இதுநாள் வரை கிடைக்கவில்லை.
எனவே, கலெக்டர் நடவடிக்கை எடுத்து பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க உதவ வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.