/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகராட்சி குடிநீர் குழாயில் சேதம் :கழிவுநீர் கலக்கும் அபாயம்
/
நகராட்சி குடிநீர் குழாயில் சேதம் :கழிவுநீர் கலக்கும் அபாயம்
நகராட்சி குடிநீர் குழாயில் சேதம் :கழிவுநீர் கலக்கும் அபாயம்
நகராட்சி குடிநீர் குழாயில் சேதம் :கழிவுநீர் கலக்கும் அபாயம்
ADDED : டிச 15, 2025 06:43 AM

விழுப்புரம்: விழுப்புரம் - திருக்கோவிலுார் சாலையில் நகராட்சி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் - திருக்கோவிலுார் சாலையில் உள்ள எல்லீஸ் அணைக்கட்டு அருகே தென்பெண்ணை செல்கிறது. இங்கு, விழுப்புரம் நகர மக்களின் குடிநீர் தேவையை போக்குவதற்கான மோட்டார் அறை உள்ளது.
இங்கிருந்து பைப்லைன்கள் நகர பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பைப்லைன்கள் செல்லும் வழியில், வழுதரெட்டி எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் சாலையோரத்தில் நான்கு இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.
கடந்த பல மாதங்களாக வீணாகும் இந்த தண்ணீரில், தற்போது அங்கு தேங்கியுள்ள கழிவுநீர் கலப்பதோடு, அந்த நீர் மீண்டும், குடிநீர் குழாய்க்கு செல்கிறது. இதனால், நகர பகுதிகளில் அசுத்தமான குடிநீரை குடிப்பதோடு, தண்ணீர் மூலம் வரும் நோய்கள் தாக்கும் சூழல் நீடிக்கிறது.
மக்களின் முக்கிய தேவையான குடிநீரில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலையை போக்க, நகராட்சி அதிகாரிகள், குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

