/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பழுதடைந்த தார் சாலை: சீரமைக்கக் கோரி மறியல் 11 பேர் மீது வழக்கு
/
பழுதடைந்த தார் சாலை: சீரமைக்கக் கோரி மறியல் 11 பேர் மீது வழக்கு
பழுதடைந்த தார் சாலை: சீரமைக்கக் கோரி மறியல் 11 பேர் மீது வழக்கு
பழுதடைந்த தார் சாலை: சீரமைக்கக் கோரி மறியல் 11 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 22, 2025 04:53 AM

வானுார்: கழுப்பெரும்பாக்கத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வானுார் அடுத்த கழுப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள பிரதான சாலை கடந்த 2022ம் ஆண்டு போடப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் சாலை முற்றிலும், பெயர்ந்து பழானது. ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மெகா சைஸ் பள்ளத்தால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்த சாலை போடப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், கிராமத்திற்குள் செல்லும் பிரதான தார் சாலையை உடனடியாக சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று காலை 7:30 மணிக்கு கீழ்புத்துப்பட்டு - திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து வானுார் பி.டி.ஓ.,க்கள் சுபாஷ் சந்திரபோஸ், மணிவண்ணன் ஆகியோர் நேரில் சென்று சாலையை பார்வையிட்டனர்.
பின், முதல்வரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ஒரு வாரத்திற்குள் சாலை அமைத்து தரப்படும் என உறுதியளித்தனர். அதனையேற்று பொதுமக்கள் 9:30 மணிக்கு மறியலை கைவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட கழுப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சுபசங்கர், தினகரன் உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.