/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டாம்கோ கடன் திட்டங்கள் கலந்தாய்வு கூட்டம்
/
டாம்கோ கடன் திட்டங்கள் கலந்தாய்வு கூட்டம்
ADDED : ஏப் 23, 2025 04:13 AM

விழுப்புரம் : தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) கடன் திட்டங்கள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, டாம்கோ மாநிலத் தலைவர் பெர்னாண்டஸ் ரத்தினராஜா தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் (பொறுப்பு) தமிழரசன் வரவேற்றார். மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விஜயசக்தி, டாம்கோ கடன் திட்டங்கள் தொடர்பாக விளக்கவுரையாற்றினார்.
டாம்கோ கடன் திட்டங்கள் தொடர்பாக விளக்க காட்சிகள் காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, தையல் இயந்திரம், கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்களுக்கான உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
கண்காணிப்பாளர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.

