ADDED : டிச 08, 2025 06:41 AM

செஞ்சி: செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் பள்ளிகளுக்கு இடையிலான நடன திருவிழா நடந்தது.
கல்லுாரி தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். இயக்குனர்கள் சாந்தி பூபதி, சரண்யா ஸ்ரீபதி குத்து விளக்கேற்றினர். கல்லுாரி சி.இ.ஒ., மணிகண்டன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், செஞ்சி, திண்டிவனம், மேல்மலையனுார் பகுதியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 63 குழுவினரும், 45 தனி நபர்களும் பங்கேற்றனர். வெற்றி பெற்ற முதல் 3 அணிகளுக்கு ரொக்கப் பரிசு, கேடயம், சான்றிதழையும் நடிகை சங்கீதா ஷெட்டி வழங்கினார்.
விழா ஒருங்கிணைப்பாளர் சத்யா, பார்மசி கல்லுாரி துணை முதல்வர் விஜயகுமார், பி.எட்., முதல்வர்கள் கோவிந்தராஜ், செந்தில்குமார், எம்.எட்., முதல்வர் சசிகுமார், நர்சிங் முதல்வர் உதய சங்கரி, மெட்ரிக் பள்ளி முதல்வர் தனலட்சுமி, சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் கீதா மற்றும் போராசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

