/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் - மரக்காணம் ரவுண்டானாவில் குறுகலான டிவைடரால் விபத்து அபாயம்
/
திண்டிவனம் - மரக்காணம் ரவுண்டானாவில் குறுகலான டிவைடரால் விபத்து அபாயம்
திண்டிவனம் - மரக்காணம் ரவுண்டானாவில் குறுகலான டிவைடரால் விபத்து அபாயம்
திண்டிவனம் - மரக்காணம் ரவுண்டானாவில் குறுகலான டிவைடரால் விபத்து அபாயம்
ADDED : பிப் 04, 2024 04:36 AM

திண்டிவனம் : திண்டிவனம் - மரக்காணம் சாலை ரவுண்டானா பகுதியில் டிவைடர் குறுகலாக இருப்பதால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறையை மீறி புறவழிச்சாலையில் செல்வதால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.
திண்டிவனம் - புதுச்சேரி சாலையில், சாணக்யா பள்ளி எதிரில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில், திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி, மரக்காணம் பகுதிக்கும், அதேபோல் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம், சென்னை (புறவழிச்சாலை வழியாக), திருவண்ணாமலை உள்ளிட்ட ஊர்களுக்கு வாகனங்கள் செல்கின்றன.
இந்த ரவுண்டானா பகுதியில் விபத்தைத் தவிர்க்க சாலையின் நடுவே டிவைடர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த டிவைடர் உயரம் குறைவாக உள்ளதால், வேகமாக வரும் வாகனங்கள் டிவைடரில் ஏறி விபத்துக்குள்ளாகி வருகின்றன.
இந்நிலையில், ரவுண்டானாவில் இருந்த மரக்காணம் சாலையில் 50 மீட்டர் துாரத்திற்கு மட்டுமே டிவைடர் குறுகலாக அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், மரக்காணம் மார்க்கத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள், குறிப்பாக கல் குவாரி டிப்பர் லாரிகள் சென்னை மார்க்கத்தில் செல்வதற்காக, போக்குவரத்து விதிகளை மீறி, குறுக்கு வழியில் சென்னை புறவழிச்சாலையில் புகுந்து தாறுமாறாக செல்வதால், எதிரில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவி வருகிறது.
இந்த வாகனங்கள், முறையாக திண்டிவனம் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள சாலையில் 'யூடர்ன்' செய்து சென்னை புறவழிச்சாலையில் செல்ல வேண்டும். ஆனால், விதியை மீறி சென்னை- புதுச்சேரி புறவழிச்சாலையில் செல்வதால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.
இந்த ரவுண்டானா பகுதியில் மரக்காணம் சாலையில் டிவைடர் சிறியதாக இருப்பதால், கனரக வாகனங்கள் மட்டுமன்றி கார், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களும் விதிகளை மீறி கடந்து செல்வதால், அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
தொடர்ந்து ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும், விதி மீறி கனரக வாகனங்கள் ரவுண்டானா பகுதியில் அத்துமீறி கடந்து செல்வதை தடுக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ரவுண்டானா பகுதியில், மரக்காணம் சாலையில் குறுகலாக அமைத்துள்ள டிவைடரை 100 மீட்டர் துாரத்திற்காவது நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான் விபத்தையும், போக்குவரத்து விதி மீறலையும் தடுக்க முடியும்..