/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் இருள் சூழ்ந்த மயிலம் சாலை; டாஸ்மாக் அருகே விபத்து அபாயம்

ADDED : செப் 09, 2025 02:24 AM
திண்டிவனம்: திண்டிவனம் மேம்பால பஸ் நிலையம் டாஸ்மாக் கடை அருகே தெரு விளக்குகள் எரியாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிலையத்தில், தொலைதுாரம் செல்லும் பஸ்கள் நின்று செல்கிறது. பஸ்நிலையத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்தில், மயிலம் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது.
டாஸ்மாக் கடையில் இரவு நேரத்தில் அதிகமான கும்பல் சேரும். திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள், புதுச்சேரியில் இருந்து சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பஸ்கள் டாஸ்மாக் கடை வழியாக சென்று, யூ டர்ன் எடுத்து மேம்பாலம் வழியாக செல்லும்.
எப்பொழுதும் பஸ் போக்குவரத்து அதிகம் உள்ள மயிலம் சாலையில், டாஸ்மாக் எதிரில் உள்ள மின் விளக்குகள் மட்டும் பல மாதங்களாக பழுதாகி கிடக்கிறது. இருள் சூழ்ந்து கிடப்பதால், மதுபோதை ஆசாமிகள் வாகனங்கள் செல்ல முடியாதபடி சாலையில் நின்று மது அருந்துகின்றனர்.
பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு நகராட்சி அதிகாரிகள், டாஸ்மாக் கடை எதிரில் உள்ள மின் விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.