தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செஞ்சி-விழுப்புரம் நான்கு வழிச்சாலையில் விபத்து...அபாயம்: ரிப்ளக்டர் போர்டுகள் அமைக்க வலியுறுத்தல்

செஞ்சி-விழுப்புரம் நான்கு வழிச்சாலையில் விபத்து...அபாயம்: ரிப்ளக்டர் போர்டுகள் அமைக்க வலியுறுத்தல்

செஞ்சி-விழுப்புரம் நான்கு வழிச்சாலையில் விபத்து...அபாயம்: ரிப்ளக்டர் போர்டுகள் அமைக்க வலியுறுத்தல்

1


UPDATED : செப் 25, 2026 06:01 AM

ADDED : செப் 24, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2026 06:01 AM ADDED : செப் 24, 2026 07:22 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செஞ்சி: செஞ்சி-விழுப்புரம் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சென்டர் மீடியன்கள் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரியாததால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. விபத்துகளைத் தடுக்க போதிய அளவில் ரிப்ளக்டர் போர்டுகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை, செஞ்சி உட்கோட்டத்துக்கு உட்பட்ட ஆற்காடு-விழுப்புரம் மாநில நெடுஞ்சாலை எண்: 4-ல், செஞ்சி முதல் மட்டப்பாறை வரை 13.50 கி.மீ. துாரத்தை, ரூ.85 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகள் கடந்த மார்ச், 4 ம் தேதி துவங்கியது. மொத்தம், 450 நாட்களுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் ஏற்கனவே உள்ள இருவழிச்சாலை விரிவுபடுத்தப்படுவதுடன், புதிதாக சென்டர் மீடியன், மழைநீர் வடிகால் மற்றும் தேவையான இடங்களில் கல்வெட்டுகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தலைமை பொறியாளர் ஆய்வு நெடுஞ்சாலைத்துறை சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் பழனிவேல் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தப் பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது சாலையின் தரம் மற்றும் ஆழம் ஆகியவை சோதனைக்கருவிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டன. பின்னர் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

புதிய சென்டர் மீடியன் இந்தப் பணியின் ஒரு பகுதியாக சாலையின் நடுவே புதிதாக 'சென்டர் மீடியன்' அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு இந்தப் பகுதியில் சென்டர் மீடியன் இல்லை.

இந்தச் சாலையில் தொடர்ந்து பயணித்து வரும் வாகன ஓட்டிகளுக்கும் புதிய அமைப்பு முழுமையாக பழக்கமாகவில்லை.

சென்டர் மீடியன் தொடங்கும் இடத்தில் சிமெண்ட் மூட்டைகளில் சிறிய அளவிலான ரிப்ளக்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இவை இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளின் அதிக வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிவதில்லை. இதனால் வாகனங்கள் சென்டர் மீடியனில் மோதி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

ஒரே இரவில் தொடர் விபத்து கடந்த, 22ம் தேதி இரவு 9:00 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை வரை, செஞ்சியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் மட்டும் சென்டர் மீடியனில் மோதி ஒரு தனியார் பஸ், 2 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.

இதேபோல், 4 தினங்களுக்கு முன்பு சிட்டாம்பூண்டி அரசு கலைக் கல்லுாரி எதிரே இரவு நேரத்தில் அரசு பஸ்சும் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்துகளில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இதுபோன்று தொடர் விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் தரப்பில் விபத்துகளைத் தடுப்பதற்கான போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ரிப்ளக்டர் போர்டுகள் அமைக்க கோரிக்கை நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்டர் மீடியனில் வாகனங்கள் மோதி உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க, சென்டர் மீடியன் தொடங்கும் இடத்தில் வெகு தொலைவில் இருந்தே வாகன ஓட்டிகளுக்கு தெளிவாகத் தெரியும் வகையில் பெரிய அளவிலான ரிப்ளக்டர் போர்டுகள் அமைக்க வேண்டும்.

மேலும், இரவு நேரங்களில் தெளிவாகத் தெரியும் வகையில் ஒளிரும் சிவப்பு அல்லது மஞ்சள் நிற எச்சரிக்கை அடையாளங்களையும் அமைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us