ADDED : ஜன 01, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அரசு ஊழியர் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் ஜனனி, 15; இவர், இங்குள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் தாய் கவிதாவின் மொபைலை பார்த்து கொண்டிருந்ததால் அவர் திட்டியுள்ளார்.
இந்நிலையில், வீட்டில் இருந்த ஜனனியை நேற்று முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
சிறுமியின் தந்தை வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.