ADDED : பிப் 11, 2024 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த தளவானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்பசிவம் மகள் சந்தியா, 22; இவர்கள் குடும்பத்தோடு கடந்த 6ம் தேதி மயிலம் முருகன் கோவிலுக்குச் சென்றனர். அங்கு சந்தியா காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தாய் ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.