ADDED : ஜூலை 15, 2025 09:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்; வானுார் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
டி பரங்கனி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் மகள் சவுந்தர்யா, 21; தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., வேதியியல் பட்டம் முடித்து வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்த சவுந்தர்யாவை திடீரென காணவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் கிளியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.