ADDED : ஜன 05, 2026 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: மகளை காணவில்லை என தந்தை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
வளவனுார் அருகே கோலியனுாரை சேர்ந்தவர் ராஜாமணி மகள் ஜெயசுதா,24; இவர் பிளஸ் 2 வரை பயின்று வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த 2ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் காணவில்லை. ராஜாமணி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

