ADDED : பிப் 22, 2026 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: காணை அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
காணை அடுத்த ஆசாரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன் மகள் மணிமொழி, 12; அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் சென்னையில் கூலி வேலை செய்து வருகின்றனர். இதனால், சிறுமி தனது பாட்டி காளியம்மாள் வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த 19ம் தேதி காளியம்மாள், பேத்தி மணிமொழியை வீட்டு வேலை செய்யவில்லை என திட்டியுள்ளார்.
இதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற மணிமொழி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பரசுராமன் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

