ADDED : மே 15, 2026 03:46 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் கல்லுாரிக்குச் சென்ற மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
வானுார் அடுத்த பொம்பூரைச் சேர்ந்தவர் முத்தமிழன் மகள் அபிநயா, 22; இவர், விழுப்புரத்தில் உள்ள அரசு மகளிர் கல்லுாரியில் பி.ஏ., தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்து கல்லுாரிக்குச் சென்றவர் மீண்டும் வரவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.
முத்தமிழன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
