ADDED : ஜூலை 06, 2026 03:38 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம், வ.உ.சி, தெருவைச் சேர்ந்தவர் நுார்முகமது மகள் ஜென்னத் பிரதவுஸ், 21; பி.ஏ., வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். கடந்த 30ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.
தாய் சல்காபேகம் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
