ADDED : நவ 01, 2026 03:00 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் பணிக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா மகள் ஆஷிகா(எ)நவநீதம், 23; இவர், விழுப்புரம் கே.கே., ரோட்டில் உள்ள மெடிக்கல் கடை ஒன்றில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் பணிக்கு சென்றவரை காணவில்லை. அவரது தாய் இளமதி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இளமதி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
