/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பட்டப் பகலில் வீடு பகுந்து திருட்டு
/
பட்டப் பகலில் வீடு பகுந்து திருட்டு
ADDED : அக் 11, 2024 06:36 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பட்டப் பகலில் பூட்டிய வீட்டை திறந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த மல்லிகைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன் மனைவி கலையரசி, 40; விவசாயி. இவர், நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டிவிட்டு, வீட்டின் ஓரமாக சாவியை வழக்கம் போல் மறைத்து வைத்துவிட்டு, வெளியே சென்றார்.
வெளியூர் சென்று, மீண்டும் அவர் வீட்டிற்கு வந்து, பூட்டியிருந்த பூட்டை திறந்து பார்த்தபோது, பீரோவிலிருந்த 13 சவரன் நகை, 5,000 ரூபாய் என 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் திருடுபோனது தெரிந்தது.
காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

