தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அதிகமாக மது குடித்தவர் சாவு

 அதிகமாக மது குடித்தவர் சாவு

 அதிகமாக மது குடித்தவர் சாவு


ADDED : ஏப் 25, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 07:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே அதிகமாக மது குடித்த நபர் இறந்தார்.

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட சின்ன கோட்டக்குப்பம், சத்தியா நகரைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் குமார் என்கிற வசந்த குமார், 34; கொத்தனார். குடிப்பழக்கம் உள்ள இவர், சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த அவர், குடி போதையில் வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்து விட்டு துாங்கியவர், அதிகாலை 5;00 மணிக்கு உறவினர்கள் பார்த்த போது, குமார் வாயில் நுரை தள்ளியடி உயிருக்கு போராடினார்.

உடன், புதுச்சேரி, கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.

இதுகுறித்து குமார் மனைவி குமாரி கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us