நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஓட்டல் சமையல் தொழிலாளி நெஞ்சுவலியால் பரிதாபமாக இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், பிடாரிகாடு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் முருகன், 49; இவர், விழுப்புரம் திருச்சி சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த 4 மாதங்களாக சமையலராகபணிபுரிந்தார்.
நேற்று மதியம் 2.00 மணிக்கு திடீரென முருகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.