/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தட்சசீலா பல்கலை மாணவர்களுக்கு டெபிட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி
/
தட்சசீலா பல்கலை மாணவர்களுக்கு டெபிட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி
தட்சசீலா பல்கலை மாணவர்களுக்கு டெபிட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி
தட்சசீலா பல்கலை மாணவர்களுக்கு டெபிட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி
ADDED : அக் 27, 2024 03:49 AM

விழுப்புரம், : திண்டிவனம் அடுத்த ஓங்கூரில் உள்ள தட்சசீலா பல்கலைழக்கழக மாணவர்களுக்கு அடையாள அட்டையுடன் கூடிய டெபிட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கருத்தரங்க கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பல்கலை வேந்தர் தனசேகரன், 'பேவே' நிறுவன தலைமைச் செயல் அலுவலர் ரவி பிரசாந்த் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு டெபிட் கார்டு வழங்கினர்.
மாணவர்கள் இந்த கார்டை பயன்படுத்தி பொருட்களை பாதுகாப்பது மற்றும் தங்குமிடங்கள், நுாலகம், ஊடக மையங்களை திறப்பதற்கும், உடற்பயிற்சி மையம், பல்கலைக் கழக வளாக சிற்றுண்டி சாலை, கணினி ஆய்வகங்கள், பொழுதுபோக்கு இடங்கள், விளையாட்டு நிகழ்வுகள், சலவை, அச்சிடுதல், நகலெடுத்தல் உள்ளிட்ட வளாக சேவைகளுக்கு பயன்படுத்தலாம்.
நிழ்ச்சியில், மின்னணு கருவி, லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உரையாடல் நிகழ்ச்சி மற்றும் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பல்கலைக் கழக இணை வேந்தர்கள் ராஜராஜன், மருத்துவர் நிலா பிரியதர்ஷினி, துணைவேந்தர் விவேக் இந்தர் கோச்சர், பதிவாளர் செந்தில், கல்வியியல் புல முதன்மையர் சுப்ரமணியன், கலை அறிவியல் புல முதன்மையர் தீபா, மருத்துவப் புலங்களின் முதன்மையர் ஜெயஸ்ரீ, தொழில் நுட்ப முதன்மையர் சுபலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.