நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த காணை டாஸ்மாக் கடை அருகே நிலத்தில் கட்டியிருந்த கம்பி வேலியில் நேற்று மாலை மான் ஒன்று சிக்கி கிடந்தது.
இதை கண்ட பொதுமக்கள், காணை போலீசார் துணையுடன் மானை மீட்டனர். மானுக்கு தலை மற்றும் காலில் சிராய்ப்பு காயங்கள் இருந்தது. மானை மீட்ட போலீசார், முதல் உதவி சிகிச்சை அளித்து, விழுப்புரம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.