/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாசன வாய்க்காலில் விழுந்த மான் மீட்பு
/
பாசன வாய்க்காலில் விழுந்த மான் மீட்பு
ADDED : மார் 24, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் அருகே பாசன வாய்க்காலில் விழுந்த புள்ளி மானை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்கு செல்லும் வாய்க்கால், எறையூர் பகுதியில் கடந்து செல்கிறது. இந்த கால்வாயை ஒட்டி வனப்பகுதியில் சுற்றித் திரியும் மான்கள் தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். நேற்று காலை தண்ணீர் குடிக்க வாய்க்காலில் இறங்கிய புள்ளிமான் தவறி விழுந்து தத்தளித்தது.
தகவலறிந்த திண்டிவனம் வனத்துறை மற்றும் வானுார் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் புள்ளி மானை உயிருடன் மீட்டு வன பகுதியில் விட்டனர்.