/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மாஜி' அமைச்சர் மீதான அவதூறு வழக்கு; பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு
/
'மாஜி' அமைச்சர் மீதான அவதூறு வழக்கு; பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு
'மாஜி' அமைச்சர் மீதான அவதூறு வழக்கு; பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு
'மாஜி' அமைச்சர் மீதான அவதூறு வழக்கு; பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : ஜன 30, 2024 07:45 AM

விழுப்புரம் : விழுப்புரம் கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் சண்முகம் மீதான வழக்கின் விசாரணை, பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க., சார்பில், நாட்டார்மங்கலத்தில் கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி. ஆரோவில்லில் 10ம் தேதி, கோட்டக்குப்பத்தில் மே 1ம் தேதி, விழுப்புரத்தில் ஜூன் 21ம் தேதி பொதுக் கூட்டங்கள் நடந்தன. இக்கூட்டங்களில், முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., மாவட்ட செயலாளருமான சண்முகம், தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் அவதுாறாகவும் பேசியதாக, அரசு வழக்கறிஞர் சுப்ரமணியம், விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 4 வழக்குகளை தொடர்ந்தார்.
இந்த வழக்குகள், நேற்று விசாரணைக்கு வந்தன. விசாரணைக்கு சண்முகம் எம்.பி., ஆஜரானார்.
அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆஜராகி, ''நான்கு வழக்குகளில் நாட்டார்மங்கலம், விழுப்புரத்தில் அவதுாறாக பேசியதாக தொடரப்பட்ட 2 வழக்குகளை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. இதர 2 வழக்குகள் தான் விசாரிக்கப்பட வேண்டும்'' என்றனர்.
அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு, 'ஐகோர்ட் உத்தரவு நகல் ஏதும் கிடைக்கவில்லை. ஐகோர்ட் உத்தரவு கிடைக்கும் வரை, விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்' என்றார்.
மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.