/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விலை அறிவிப்பதில் தாமதம்: செஞ்சியில் விவசாயிகள் மறியல்
/
விலை அறிவிப்பதில் தாமதம்: செஞ்சியில் விவசாயிகள் மறியல்
விலை அறிவிப்பதில் தாமதம்: செஞ்சியில் விவசாயிகள் மறியல்
விலை அறிவிப்பதில் தாமதம்: செஞ்சியில் விவசாயிகள் மறியல்
ADDED : ஜன 28, 2025 06:23 AM

செஞ்சி : செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் நெல்லுக்கு விலை அறிவிப்பதில் தாமதம் ஆனதால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று 500 விவசாயிகள் 10 ஆயிரம் நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் வியாபாரிகள் கொடுக்கும் விலை பட்டியலை, கம்ப்யூட்டரில் ஏற்றி ஏலத்தை முடிவு செய்து, 1:00 மணிக்கு விலை அறிவிப்பு செய்து, நோட்டீஸ் ஒட்டுவர். நேற்று கம்ப்யூட்டர் சர்வர் சரிவர வேலை செய்யாததால், மதியம் 2:50 மணி வரை விலை அறிவிப்பு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பிற்பகல் 3.00 மணிக்கு மார்க்கெட் கமிட்டிஎதிரே திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் வினோத்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், விலையை அறிவித்து நோட்டீசை உடனடியாக ஒட்டினர். அதையடுத்து விவசாயிகள் மாலை 3:20மணிக்கு மறியலை கைவிட்டனர்.

