நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சியில் கூடுதல் வங்கி கேட்டு அகில இந்திய இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செஞ்சியில் அகில இந்திய இந்து மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை ரோட்டில் எஸ்.பி.ஐ., வங்கி அருகே கூடுதல் வங்கி வேண்டும், ஏ.டி.எம்., மிஷின்கள் நவீன முறையில் வேண்டும் என ரிசர்வ் பேங்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் செஞ்சி ராஜா தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில செயலாளர் மாவீரன், திருமுருகன் அடிகளார், ஜெயபிரகாஷ் அடிகளார், பொதுச்செயலாளர் எல்லப்பன், சமூக அலுவலர் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

