ADDED : செப் 19, 2024 11:22 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில், சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விழுப்புரம் மண்டல தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். கடலுார் மண்டல தலைவர் மணிகண்டன், செயலாளர்கள் திருவண்ணாமலை முரளி, கடலுார் முருகன், விழுப்புரம் ரகோத்தமன், திருவண்ணாமலை மண்டல தலைவர் சேகர், கடலுார் மண்டல சிறப்பு தலைவர் பாஸ்கரன், சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் மூர்த்தி, ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க திருவண்ணாமலை மண்டல நிர்வாகி குப்புரங்கன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு பஸ்கள் இயக்கத்தை தனியார் மூலம் இயக்கிட டெண்டர் விடும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசு உடனே தொடங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.