sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 பா.ஜ., - அ.தி.மு.க.,வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

/

 பா.ஜ., - அ.தி.மு.க.,வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., - அ.தி.மு.க.,வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., - அ.தி.மு.க.,வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 13, 2026 05:06 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ.,வை கண்டித்தும், இதற்கு துணை போகும் அ.தி.மு.க.,வை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்கு நகர தி.மு.,க., செயலாளர் சக்கரை தலைமை தாங்கினார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தார்.

மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கிறது. இதில், குறிப்பாக கீழடி அகழ்வாரா ய்ச்சிக்கு அனுமதி தர மறுத்தல், இந்தி திணிப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதம், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மூலம் தொகுதிகளின் எண்ணிக்கை குறைத்தல்.

நுாறு நாள் வேலை திட்டம் முடக்கம், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பூஜ்ஜியத்தை வழங்கிய, மத்திய அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் அதே பூஜ்ஜியத்தை அளிப்பார்கள். தமிழகத்தில் 7வது முறையாக தி.மு.க., ஆட்சியையும், 2வது முறையாக முதல்வராக ஸ்டாலினை பதவியில் அமர வைப்போம்' என்றார்.

மத்திய மாவட்ட காங்., கமிட்டி தலைவர் சிவா, வழக்கறிஞர் தயானந்தம், நகர தலைவர் செல்வராஜ், வி.சி., - ம.தி.மு.க., - மா.கம்யூ., - இந்திய கம்யூ., - த.வா.க., '- ம.நீ.ம., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us