நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், சகாபுதின், தலைவர் தாண்டவராயன், விவசாய விடுதலை முன்னணி மாநில குழு அம்பேத்கர், அரிகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், டில்லி விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக, மத்திய பா.ஜ., அரசு எழுதி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து பேசினர்.

