ADDED : மார் 14, 2024 06:40 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம், : இறந்த பணியாளர்களின் வாரிசுளுக்கு பணி வழங்கக் கோரி, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். தலைவர் கோபிநாத், நிர்வாகிகள் பழனிவேல், கதிர்வேல் பங்கேற்றனர்.
சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். கட்டாய இறக்கு கூலி வசூலிப்பதை தடுக்க வேண்டும். பணி வரன்முறைபடுத்தாத பணியாளர்கள் பணியின்போது இறந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
