ADDED : ஏப் 26, 2025 04:32 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம் : விழுப்புரத்தில் இந்திய கம்யூ., சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் கலியமூர்த்தி, முருகன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சரவணன், ராமச்சந்திரன், நாராயணன், சகாபுதீன், ராஜேந்திரன், ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் இன்பஒளி கண்டன உரையாற்றினார்.
தமிழக பல்கலைக்கழகங்களில் வேந்தராக சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கவர்னரை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
