ADDED : மே 13, 2026 06:05 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் பல் வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொ.மு.ச., மாவட்ட பொதுச் செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் சேகர் முன்னிலை வகித்தார். இதில், பா.ஜ., ஆளும் மாநிலங்களில் உழைப்பு சுரண்டலுக்கு எதிராக போராடும் தொழிலாளர்கள் தாக்கப்படுவதைக் கண்டிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் ஞானசேகர், வேலு, சவுரி ராஜன், மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
