ADDED : ஆக 17, 2026 04:14 AM
விழுப்புரம்: திண்டிவனம் அரசு கலைக் கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள 183 அரசு கலைக் கல்லுாரிகளில் 8,000க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். அதில், பலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் ராமஜெயம் முன்னிலை வகித்தார். கவுரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டும், நீண்ட கால கோரிக்கையான பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு வழங்கிட முதல்வரும், உயர்கல்வித்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
