/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துணை முதல்வர் வருகை திண்டிவனம் டி.எஸ்.பி.,ஆய்வு
/
துணை முதல்வர் வருகை திண்டிவனம் டி.எஸ்.பி.,ஆய்வு
ADDED : நவ 03, 2024 11:10 PM

திண்டிவனம்:துணை முதல்வர் வருகையையொட்டி, திண்டிவனத்தில் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி., ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 5 மற்றும் 6ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார்.
இதையொட்டி துணை முதல்வருக்கு, திண்டிவனம் ஆர்யாஸ் ஓட்டல் அருகே உள்ள சென்னை சாலையில் நாளை 5ம் தேதி மாலை 3:00 மணியளவில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
விக்கிரவாண்டியில் நடந்த த.வெ.க., மாநாட்டிற்கு பதில் தரும் வகையில் வரவேற்பு நிகழ்ச்சியில் அதிகளவில் தி.மு.க.,வினர் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியுள்ளார். இதனால் சென்னை - திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.
இதைக் கருத்தில் கொண்டு திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., பிரகாஷ், நேற்று காலை ஆர்யாஸ் ஓட்டல் அருகே ஆய்வு செய்தார். அப்போது, தி.மு.க., மாவட்ட செயலாளர் சேகருடன், வரவேற்பிற்கு வரும் கட்சியினரின் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் எந்த இடங்களில் பார்க்கிங் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.