/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துணை முதல்வருக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு
/
துணை முதல்வருக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு
ADDED : நவ 06, 2024 05:38 AM

திண்டிவனம் : விழுப்புரம் வருகை தந்த துணை முதல்வர் உதயநிதிக்கு, திண்டிவனத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் இன்று 6ம் தேதி நடைபெறும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி நேற்று விழுப்புரம் வருகை தந்தார்.
அவருக்கு வடக்கு மாவட்ட தி.மு.க.,சார்பில் நேற்று மாலை 4:00 மணிக்கு திண்டிவனம் - சென்னை சாலையில் ஆர்யாஸ் ஓட்டல் எதிரே அமைச்சர் பொன்முடி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வடக்கு மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் அமைச்சர் மஸ்தான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், சீத்தாபதி சொக்கலிங்கம், தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார். புதுச்சேரி எம்.எல்.ஏ., சிவா, முன்னாள் அமைச்சர் சிவக்குமார், விழுப்புரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், துணை அமைப்பாளர்கள் ரமேஷ், பாபு, திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம்.
ஒன்றிய செயலாளர்கள் ராஜாராம், பழனி, தயாளன், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், முன்னாள் நகர செயலாளர் கபிலன், கவுன்சிலர்கள் நந்தகுமார், பிர்லா செல்வம், பார்த்திபன், நகர அவைத்தலைவர் ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார், வழக்கறிஞர்கள் ஆதித்தன், அசோகன், சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.